பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்திய வீரர் வீர மரணம்... தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

ஜம்மு: காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் நவ்ஷேரா எல்லை அருகே இருந்த பாகிஸ்தான் ராணுவ சாவடி கடும் சேதமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீரில் இந்திய வீரரை சுட்டுக்கொன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஜோரி மாவட்டம் நஷ்ரோவில் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் பாகிஸ்தான் ஆத்திரம் அடைந்துள்ளது. இந்த பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க, அது முயற்சி செய்து வருகிறது.

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவ சாவடி மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: