×

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்கிறது... திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பால் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4-ம், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28-ல் இருந்து 32 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பால் கொள்முதல் விலை உயர்வால் 4.60 லட்சத்துக்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆவின் நிர்வாகம்


அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், பதப்படுத்தும் செலவு உள்ளிட்டவை உயர்ந்ததாலும் பால் விற்பனை விலை உயர்வதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Aavin milk, Milk prices, Milk prices rise, Milk Purchases, Government of Tamil Nadu, Aavin
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்