விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க இயலும் என்ற நம்பிக்கை உள்ளது : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சென்னை: நீதிமன்றம் மூலமாக தமிழிழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க இயலும் என்ற நம்பிக்கை இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழிழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

முதல் கூட்டம் கடந்த ஜூலை 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிலையில் , இரண்டாவது கருத்து கேட்பு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புதிய அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் 2-வது நாளான இன்று நீதிபதி சங்கீதா அமர்வில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்கவை எம்.பி. யுமான வைகோ ஆஜராகி விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக வாதங்களை முன் வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது: சில பத்திரிகைகளில் என்ன அனுமதிக்கவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. பழைய முறைப்படி என்னை அனுமதித்து இருக்கிறார் என்றும் என்னை எதிர்வாதம் செய்வதிற்கு மட்டுமே அனுமதிக்க வில்லை. நீதிபதி மூலமாக குறுக்கு விசாரணை செய்யும் அந்த மூன்று முறை மட்டுமே எனக்கு கொடுக்கவில்லையெனிலும் என்னை அனைத்து தரப்பு பற்றியும் வாதாட அனுமதித்தார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Related Stories: