பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலமாக வளர்ச்சி திட்டங்களை வேகபடுத்த முடியும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன்

சென்னை: கோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலமாக வளர்ச்சி திட்டங்களை வேகபடுத்த முடியும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

கோபிச்செட்டிபாளையத்தில் ஈஸ்வரன் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்தால் ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபியை தனி மாவட்டமாக்குவதற்கு தான் கோரிக்கை வைப்பதாக, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்து இருப்பதாக கூறியிருந்தார். தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை பிரித்து கொண்டிருக்கிறார்களே அங்கெல்லாம் 10 ஏக்கர் நிலம் பெற்றுக்கொண்டு தான் பிரித்தார்களா? எனவும்  ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு மாவட்டத்தை பிரிப்பதற்கும் , ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கும் 100 ஏக்கர் நிலம் எதற்கு என அமைச்சர் விளக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  கோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலமாக வளர்ச்சித்திட்டங்களை வேகப்படுத்த முடியும் என்று அந்தந்த மாவட்டங்களில் மூடப்பட்டு கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை காப்பாற்றி வேலை இழப்புகளையும் தவிர்க்க முடியும் என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: