×

சாதி கயிறுகளை மாணவர்கள் கட்ட தமிழக அரசு தடை: திருமாவளவன் வரவேற்பு

சென்னை: சாதியை அடையாளப்படுத்தும் வகையிலான கயிறுகளை மாணவர்கள் கட்டக்கூடாது என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு விடுதலை சிறுதலைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இதை தெரிவித்தார்.  

சாதி கயிறு விவகாரத்தை எச்.ராஜா போன்றவர்கள் திசை திருப்ப முயற்சி செய்வதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: பள்ளி குழந்தைகளின் மழலைகளின் உள்ளத்தின் சாதி நஞ்சை விதைக்க கூடாது. அவர் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டும். ஜனநாயகனத்தை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே இப்படி பட்ட மதவாத அரசியல் தடுக்கப்பட வேண்டும் என்ற தமிழகஅரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். இந்து மத பழக்கவழக்கங்களுக்கு எதிராக சின்னங்களை அணிய கூடாது என்று அதற்கு எதிராக செயல்பட கூடாது என்று எச். ராஜா போன்றவர்கள் அதை திசைதிருப்ப பார்க்கிறார்கள் என்று அவர் கூறினார்.


Tags : Caste rope, students, ban, thirumavalavan, welcome
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்