×

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடரும் என்று தெரிவித்தார். மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூரில் 17 செ.மீ. மழை


தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 17 செ.மீ. மழை கொட்டியுள்ளது. கடலூரில 13 செ.மீ. மழையும், அரியலூரில் 12 செ.மீ. மழையும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 11 செ.மீ. மழையும், விழுப்புரத்தில் 10 செ.மீ., திருவாரூர், தஞ்சையில் தலா 8.செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu, heavy rainfall, 13 districts, meteorological department, Chennai,
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...