ஹாங்காங் போராட்டத்த்தில் பங்கேற்றவர்களின் தொழில் நிறுவனங்களுக்கு சீனா அழுத்தம்

ஹாங்காங்: ஹாங்காங் போராட்டத்தால் சீனா தரும் அழுத்தத்தால் கேதே பசிபிக் விமான நிறுவனம் செயல்படுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிறுவனம் ஹாங்காங்கை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது, இந்த நிலையில் ஹாங்காங் போராட்டத்தில் கேதே பசிபிக் விமான நிறுவன ஊழியர்களும் பங்கேற்றனர்.

இதனால் அவர்கள் சட்டவிரோத போராட்டத்தில் பங்கேற்றதாக கூறி, அவர்கள் சீனாவின்  வான்பரப்பிலோ சீனாவிற்கு வந்து செல்லும் விமானங்களிலோ பணியாற்ற கூடாது என சீனா உத்தரவிட்டது.  இந்த உத்தரவு சீனாவிற்கு விமானங்களை இயக்குவதோடு  அந்நாட்டின் வான்பரப்பை பயன்படுத்தி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்களை இயக்கும்  கேதே பசிபிக் விமான நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டதாக  கூறப்படும் 2 பைலட்களை  பணியில் இருந்து காரணம் கூறாமல் அந்நிறுவனம் நீக்கியது. போராட்டத்தில் ஈடுப்படும் ஊழியர்களின் நிலைப்பாடு, நிறுவனத்தின் நிலைப்பாடு ஆகாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் சீனாவின் உள்நாட்டு வான்போக்குவரத்து அதிகாரிகள்  கேதே பசிபிக் விமான நிறுவனம் தார்மீக ரீதியான தொழில் தர்மங்களை மீறியதாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் நேற்று கேதே பசிபிக் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட 2 முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. சீனாவின் அழுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு கேதே பசிபிக் விமான நிறுவனத்தோடு நின்றுவிடாது என்றும், வேறு நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள்.

இதனால் சீனாவில் கிடைக்காத தொழில் சுகந்திரத்திற்காக ஹாங்காங்கை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச நிறுவனங்கள் , சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு மாற்றும் சூழல் ஏற்படலாம் என்று தொழில் முனைவோர் கூறுகின்றனர்.

Related Stories: