ஆம்பூர் பஸ் நிலையத்தில் மலைகிராமங்களுக்கான 5 புதிய மினிபஸ்கள் துவக்கம்

ஆம்பூர் : ஆம்பூர் பஸ் நிலையத்தில் நேற்று பல்வேறு மலைகிராமங்களுக்கான 5 புதிய மினி பஸ்களை அமைச்சர் கே.சி.வீரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையில் தமிழக முதல்வர் 500 புதிய பஸ்களை துவக்கி வைத்தார். இதில் விழுப்புரம் கோட்டத்திற்கு 18 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவற்றில் வேலூர் மண்டலத்திற்கு 5 புறநகர பஸ்களும், 5 மலை கிராமத்திற்கு செல்லும் மினி பஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் வேலூர் மண்டலத்திற்கு புதிய பஸ்கள் துவக்க விழா நடந்தது.

ஆம்பூர் பஸ் நிலையத்தில் நேற்று நடந்த விழாவில் திருப்பத்தூர்-புதூர்நாடு, திருப்பத்தூர் - நெல்லிவாசல், திருப்பத்தூர்-கோம்பை, திருப்பத்தூர்-கம்புகுடி, பேர்ணாம்பட்டு-அரவட்லா ஆகிய மலைகிராமங்களுக்கான 5 மினி பஸ்களை அமைச்சர் கே.சி.வீரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் நிலோபர் கபீல், கலெக்டர் சண்முக சுந்தரம், எம்எல்ஏ வில்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாய்க்கனேரி மலைகிராமத்திற்கு அரசு பஸ்

ஆம்பூர் பஸ் நிலையத்தில் நேற்று திருப்பத்தூர், பேர்ணாம்பட்டு அருகே உள்ள மலைகிராமங்களுக்கான அரசு மினி பஸ்கள் துவக்கி வைக்கப்பட்டன. ஆம்பூர் தொகுதியில் உள்ள நாய்க்கனேரி, பனங்காட்டேரி உள்ளிட்ட பல்வேறு மலைகிராமங்களுக்கு செல்ல அரசு பஸ் தேவை என அப்பகுதியினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இந்த மலைகிராமத்திற்கு உடனடியாக அரசு மினி பஸ்சை இயக்க வேண்டும் என பஸ் நிலையத்தில் இருந்த அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: