×

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.28,856-க்கு விற்பனை...நகை பிரியர்கள் கவலை

சென்னை: தங்கம் விலை கடந்த 1ம் தேதி முதல் உயர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு சாதனையும் படைத்து வருகிறது. அதாவது, கடந்த 1ம் தேதி ஒரு சவரன் 26,480, 2ம் தேதி 27,064, 3ம் தேதி 27,328,  5ம் தேதி 27,680, 6ம் தேதி 27,784, 7ம் தேதி 28,376, 8ம் தேதி 28,464, 9ம் தேதி 28,552, 10ம் தேதி 28,656, 12ம் தேதி சவரன் 28,824, 13ம் தேதி 29,016க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி  தங்கம் விலை திடீரென சரிவை சந்தித்தது.  சவரனுக்கு 392 குறைந்து ஒரு சவரன் 28,624க்கு விற்கப்பட்டது. இந்த விலை சரிவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுநாளே தங்கம் விலை அதன் போக்கை காட்டியது.

அதாவது, நேற்று முன்தினம்(15ம் தேதி) தங்கம் விலை கிராம் 49 அதிகரித்து ஒரு கிராம் 3,618க்கும் சவரனுக்கு 320 அதிகரித்து ஒரு சவரன் 28,944க்கும் விற்கப்பட்டது. நேற்று மீண்டும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. கிராமுக்கு 35 குறைந்து  ஒரு கிராம் ரூ.3,583க்கும் சவரனுக்கு 280 குறைந்து ஒரு சவரன் 28,664க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ஒரு சவரன் 28,856க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்காவின் பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் உலக சந்தையில்  எதிரொலித்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளது. குறைவதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

8 மாதங்களில் ரூ.4,688 உயர்வு:

தங்கம் விலை கடந்த ஜனவரி 1ம் தேதி சவரன் ரூ.24,168க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 1ம் தேதி ரூ.25,488, மார்ச் 1ம் தேதி ரூ.25,096, ஏப்ரல் 1ம் தேதி ரூ.24,272, மே 1ம் தேதி ரூ.24,304, ஜூன் 1ம் தேதி ரூ.24,632, ஜூலை 1ம் தேதி  ரூ.25,728 என்று படிப்படியாக விலை உயர்ந்தது. இன்று தங்கம் விலை சவரன் ரூ.28,856க்கு விற்கப்படுகிறது. அதாவது கடந்த ஜனவரி முதல் இன்று வரை சவரனுக்கு ரூ.4,688 அளவுக்கு உயர்ந்துள்ளது.

Tags : Gold price rises: Shares go up by Rs 192 to Rs 28,856
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...