கோவையில் தோட்டம் வாங்கித் தருவதாகக்கூறி தொழிலதிபரை கடத்திய கும்பல் கைது

கோவை: கோவையில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் பெண் உள்பட 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி வரும் குணசேகரன்,  அவர் நண்பர் ஜான்சன் மற்றும் ஓட்டுநர் ரகுபதி ஆகியோர் கடத்தி செல்லப்பட்டனர். குறைந்த விலையில் தோட்டம் வாங்கி தருவதாக கூறி அவர்களை 5 பேர் கடத்தி சென்றதாக தெரிகிறது.

Advertising
Advertising

அம்மாப்பட்டியில் கிடங்கு ஒன்றில்  3பேரையும்  அடைத்து வைத்து அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது . குணசேகரனிடம் இருந்த 2 லட்ச ரூபாய் பணம், நகைகள், செல்போன் போன்றவற்றை பறித்ததாக தெரிகிறது. மேலும் ரூ. 11லட்சம் கேட்டு மிரட்டியதுடன் வெத்து காசோலையில் குணசேகரனிடம் கையெழுத்து வாங்கியதாக  தெரிகிறது. இரவு நேரத்தில் கொள்ளை கும்பல் மது போதையில் இருந்த போது, குணசேகரன் உள்ளிட்ட 3-பேரும் அவர்களிடம் இருந்து தப்பி விட்டனர்.

கடத்தல் தொடர்பாக கோவை சரவணப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஒரு பெண் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.  இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடந்திருப்பதாக காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories: