இரண்டு நாள் பயணமாக பூட்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: விமான நிலையத்தில் புற்சாக வரவேற்பு

 பூட்டான்: இரண்டு நாள் பயணமாக பூட்டான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் புற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமது வெளிநாட்டு பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், இந்தியா-பூட்டான் இடையிலான நட்பு ஆழமானது பழமையானது என்று குறிப்பிட்டுள்ளர். நம்பகமான நட்புநாடாகவும் அண்டை நாடாகவும் பூட்டான் விளங்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளர். தமது பயணம் மூலம் இந்த நட்பும் இருநாடுகளின் எதிர்காலமும் மேலும் வளம்பெறும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்கை நட்பு ரீதியாகச் சந்தித்து பேசும் பிரதமர் மோடி, அந்நாட்டின் 4 வது மன்னர் ஜிக்மி கேஷஷர் நம்கியாலையும் சந்தித்து பேசுகிறார். சந்திப்பின்போது, பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் இந்தப் பேச்சுவார்த்தை பலனுள்ளதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியா பூடான் இடையே ராணுவ, பாதுகாப்புத்துறை, நீர் மின்னுற்பத்தி, மின்சார கொள்முதல், வர்த்தகம், கலாச்சாரம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறை ஒப்பந்தங்களும், பூடான் கல்வித்துறை சார்பில், டெல்லி,  மும்பை, கான்பூர் ஐ.ஐ.டிக்களுடனும், சில்சார் என்.ஐ.ஐ.டி.யுடனும் நான்கு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. பயணத்தின் இரண்டாம் நாளில் பூட்டானில் ராயல் பல்கலைக்கழகத்தின் இளம் மாணவர்களுடன் கலந்துரையாட  இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார். பிரதமராக மீண்டும் பதவியேற்ற பின் பிரதமர் மோடி, முதல் முறையாக பூட்டான் சென்றடைந்தார். அவங்கு பிரதமர் மோடிக்கு பூட்டான் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: