அயோத்தி தூண்களில் இந்து கடவுள் உருவங்கள்: உச்ச நீதிமன்றத்தில் ராம் லாலா வக்கீல் வாதம்

புதுடெல்லி: ‘‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் 1950ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட தூண்களில் சிவபெருமானின் உருவங்கள் உள்ளது’’ என உச்ச நீதிமன்றத்தில் ராம் லாலா அமைப்பின் சார்பில் வாதாடப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இப்பிரச்னையில் சுமூக தீர்வு காண உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவாலும், எந்த பயனும் ஏற்படவில்லை. இதையடுத்து, இந்த அப்பீல் மனுக்களை தினமும் விசாரிக்க முடிவு செய்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, நேற்று 7வது நாளாக விசாரணை நடத்தியது. இதில், ராம் லாலா விராஜ்மன் அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வைத்தியநாதன் வாதிடுகையில், ‘‘கடந்த 1950ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி சர்ச்சைக்குரிய இடத்தில் நீதிமன்ற ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். அவரது அறிக்கையில், இங்குள்ள தூண்களில் சிவபெருமான் உருவங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இது போன்ற உருவங்கள் மசூதியில் இருப்பதில்லை, கோயிலில் மட்டும்தான் இருக்கும்,’’ என்றார்.  அயோத்தியில் கண்டெடுக்கப்பட்ட வரைபடம், தூண்களில் இருந்த படங்களின் குறிப்புகள், நீதிமன்ற ஆணையரின் ஆய்வறிக்கை ஆகியவற்றையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

Advertising
Advertising

Related Stories: