ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு'மேல்சாந்தி தேர்வு இன்று நடக்கிறது

திருவனந்தபுரம்: ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை ேநற்று திறக்கப்பட்டது. இன்று புதிய மேல்சாந்திகள் தேர்வு நடக்கிறது. சபரிமலை  ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை  திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ்மோகனர் முன்னிலையில்  கோயில் மேல்சாந்தி வாசுதேவ நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை காட்டினார்.   இன்று அதிகாலை  5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெறும். தொடர்ந்து கணபதிஹோமம், உஷபூஜை நடைபெறும்.  இன்று முதல் 21ம் தேதி வரை இரவில் படி பூஜை நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு  கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும். சபரிமலை, மாளிகைபுரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள் ஐப்பசி மாதம் 1ம் தேதி ேதர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். ஆனால், இந்த ஆண்டு  ஆவணி மாதம் மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

Advertising
Advertising

இதன்படி, இன்று காலை  சன்னிதானத்தில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே  நேர்முக தேர்வு மூலம் சபரிமலைக்கு 9 பேரும், மாளிகைபுரம் கோயிலுக்கு 9  பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தலா ஒருவர் குலுக்கலில் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்  புரட்டாசி மாதம் 1ம் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் சபரிமலையில் தங்கி, கோயில் பூஜைகள் குறித்து படிக்க வேண்டும். இந்த புதிய முறை இந்தாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.  அதைத் தொடர்ந்து, மண்டல கால  பூஜைக்கு நடை திறக்கப்படும். அன்று இவர்கள் புதிய மேல்சாந்திகளாக  பொறுப்பேற்பார்கள். கார்த்திகை 1ம் தேதி முதல் இருவரும் நடை  றந்து  பூஜைகள் செய்வார்கள்.

Related Stories: