அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ஜாதிக்கயிறு சுற்றறிக்கை குறித்து என்னை கலந்தாலோசிக்கவில்லை

சத்தியமங்கலம்: ஜாதிக்கயிறு   குறித்து சுற்றறிக்கையை என்னை கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகள் அனுப்பி விட்டனர். என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகரில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிகளுக்கு பதிலாக வீடுகளில் பள்ளிக்கூடங்கள் நடந்து வருகிறது. கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கை வைப்பது எளிது. நகரின் மையப்பகுதியில் 100 ஏக்கர் நிலம் எடுத்து தந்தால் அதுபற்றி யோசிப்போம்.ஜாதிகளை குறிக்கும்  அடையாளங்களை பள்ளிக்கு அணிந்து வரக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் என்னிடம் கலந்தாலோசிக்காமல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி விட்டனர். இதன்காரணமாக குழப்பம் ஏற்பட்டது. பள்ளிகளில் இதுபோன்ற நிலை இல்லை. எந்த பள்ளிகளாவது இதுபோன்ற ஜாதிக்கயிறு போன்ற அடையாளங்களை அணிந்து வருகிறார்கள் என தெரிந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.  இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: