உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடும்: டிடிவி.தினகரன் பேட்டி

சென்னை: வரும் உள்ளாட்சி தேர்தலில் அமமுக நிச்சயம் போட்டியிடும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள பெரியபாளையத்து அம்மன் கோயில் 92ம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர் எம்எல்ஏவும், அமமுகவின் பொதுச்செயலாளருமான டிடிவி.தினகரன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி.தினகரன் பேசியதாவது:

Advertising
Advertising

நீலகிரி பகுதிக்கு முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிடவில்லை என்றாலும், அப்பகுதி மக்களுக்கு உரிய நிவாரணங்களை அளிக்க வேண்டும். கஜாபுயலில் நிவாரணம் வழங்காமல் கோட்டைவிட்டது போன்று நீலகிரியிலும் நடக்காமல் உடனே நிவாரணம் வழங்க வேண்டும். உள்ளாட்சி மன்ற தேர்தலுக்குள் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்கிற நோக்கில் பணிகள் விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் அமமுக நிச்சயம் போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories: