செப். 15ம் தேதி நந்தனத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு: வைகோ அறிவிப்பு

சென்னை: அண்ணா 111வது பிறந்தநாள் விழா மாநாடு செப்.15ம் தேதி சென்னை நந்தனத்தில் நடக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாளில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்தநாள் விழா மாநாடு, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 8.30 மணிக்கு நாதசுவர இசையுடன் தொடங்கி நடைபெற உள்ளது.திமுக தலைவர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்குகிறார். துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி மாநாட்டை திறந்து வைக்கிறார். முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பட்டாசு வெடிக்க தடை

மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:  ‘மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில்  ஆர்வமிகுதியால் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி  வருகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறும், தீ விபத்து ஏற்படும்  அபாயமும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் நிகழ்கிறது. எனவே, பட்டாசு வெடிப்பதை  கண்டிப்பாகக் கைவிட வேண்டும். இதனை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories: