சென்செக்ஸ், நிப்டி தடுமாறி மீண்டது

மும்பை: மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்), தேசிய பங்குச்சந்தை (நிப்டி) நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கியதும் சரிவை சந்தித்தன.  ஒரு நிலையில் சென்செக்ஸ் 337 புள்ளிகள் சரிந்தன. நிப்டியும் சரிவை சந்தித்து மொத்தம் 10,924 புள்ளிகளில் நின்றது.  பிற்பகலில் ஆட்டோ மற்றும் சில வங்கிகளின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதால் சந்தை நிலவரம் தடுமாற்றத்தில் இருந்து ஏற்றம் பெற்றது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 39 புள்ளிகள் உயர்ந்து மொத்தம் 37,350 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல், நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து மொத்தம் 11,049 புள்ளிகளில் நிலை பெற்றது. காலையில் தடுமாறினாலும் பிற்பகலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

Advertising
Advertising

நிப்டியில், அரசு வங்கி, தனியார் வங்கிகளின் பங்குகள் பிற்பகலில் ஏற்றம் பெற்றன. 0.7 முதல் 1.5 சதவீதம் வரையில் அவை விலை உயர்ந்து விற்பனையாகின. இதனால் காலையில் சரிவை சந்தித்த சந்தை நிலவரம் பிற்பகலில் சிறிது தலை நிமிர்ந்தது. தேசிய பங்குசந்தையில் பார்மா குறியீடு நேற்று இழப்பைச் சந்தித்தது.ரூபாய் மதிப்புமும்பை அன்னியச் செலாவணி பரிவர்த்தனை சந்தையில் நேற்று காலை ரூபாய் மதிப்பு சற்று சரிந்தது. டாலருடனான மதிப்பீட்டில் 20 பைசா குறைந்து ₹71.47 என்ற நிலையில் பரிவர்த்தனையானது.கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பங்குச்சந்தையில் ஏற்பட்ட துவக்க சரிவு ஆகியவை முதலீட்டாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ரூபாய் மதிப்பு குறைந்தது.

Related Stories: