வெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்ததால் சாப்ட்வேர் நிறுவனங்களில் ஊழியர்கள் வேலையிழப்பு

கொல்கத்தா / பெங்களூரூ,: நாட்டில் உள்ள முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் ‘அவுட் சோர்சிங்’ ஆர்டர்கள் குறைந்ததால், ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் ஊதியம் அதிகம் தரும் நிறுவனங்களுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திறமைவாய்ந்த / அனுபவம் வாய்ந்த இளம் ஊழியர்கள் வெளியேறுவதைத் தடுக்க அவர்களுக்கு கூடுதல் ஊதியம் அளித்து தக்க வைத்துக் கொள்ளவும் நிறுவனங்கள் படாதபாடு வருகின்றன. சாப்ட்வேர் நிறுவனங்கள் தற்போது திறமையான / அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் அவர்களுக்கு கூடுதல் ஊதியம், பதவி உயர்வு, போனஸ் உள்பட பல சிறப்பு சலுகைகள் அளித்து தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளன. ஒரு பக்கம் வேலையிழப்பும் மறுபக்கம் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதால், சாப்ட்வேர் நிறுவனங்கள் தடுமாற்றத்தில் உள்ளன.

“சாப்ட்வேர் நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேறுவது தற்போது சராசரியாக 1 சதவீதம் அளவில் உள்ளது. அதேவேளையில், புதிய நவீன தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த ஊழியர்கள் மற்றும் சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிகம் உள்ள பெரு நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிக ஊதியம் அளிக்கும் நிறுவனங்களில் சேரும் முயற்சியில் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் நிலையும் அதிகரித்துள்ளது என்று கேரியர்ஸ் மற்றும் ஹை-டெக் தொழில்கள் நிறுவனத்தின் முதல்வர் டாபஸ்மிர்தா தாஸ் தெரிவித்தார். சாப்ட்வேர் நிறுவனங்களில் 3 முதல் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த / திறமையான ஊழியர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான ஊழியர்களை அதிக ஊதியம் கொடுத்தும் கூடுதல் சலுகைகள் அளித்தும் பணியில் அமர்த்த சாப்ட்வேர் நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத காலத்தில் இன்போசிஸ், விப்ரோ உள்பட பல முன்னணி நிறுவனங்களில் இருந்து ஏராளமான ஊழியர்கள் விலகி வேறு நிறுவனங்களில் பணியில் சேர்ந்துள்ளனர்.  ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் இதுபோன்று பதவி விலகிய ஊழியர்களின் எண்ணிக்கை 19 சதவீதமாக இருந்தது. இதுவே ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து 23.4 சதவீத ஊழியர்கள் விலகியுள்ளனர். இதற்கு முந்தைய மூன்று மாத காலத்தில் 20.4 சதவீத ஊழியர்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர். விப்ரோ நிறுவனத்தில் ஊழியர்கள் விலகியது கடந்த காலாண்டில் 17.6 சதவீதமாக இருந்தது. இது, கடந்த 12 முதல் 18 மாதங்களைவிட 1 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.

திறமையான ஊழியர்கள் பணியில் இருந்து விலகிச் செல்வதைத் தடுக்க இந்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது, ஜூனியர் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையில் போனஸ் தரவும் முன்வந்துள்ளது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பல்வேறு சலுகைகள் என வாரிக் கொடுத்து ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முயன்று வருகின்றன. “எங்களது நோக்கம் என்னவென்றால், நிறுவனத்தின் வருவாயை பெருக்குதல், நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் சிறந்த பணி கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவன் மூலம் நிறுவனத்தின் செயல்பாடு தானாக உயரும் என்று காக்னிசன்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த ஜூலையில் திறமையான அலுவலர்கள் நிறுவனத்தில் இருந்து விலகிச் செல்வதைத் தடுக்க 48 மில்லியன் டாலர் வரையில் ஊதியம் உள்பட சலுைகள் வழங்கியுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார். சாப்ட்வேர் நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் ஏன் பதவி விலகிச் செல்கிறார்கள் என்ற காரணத்தை அறிய ஓர் பணிக்குழுவை நியமித்ததாக இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ சாலில் பாரேக் சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: