கேகேஆர் பயிற்சியாளராக மெக்கல்லம்

2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2008 முதல் 2010 வரையும், பின்னர் 2012-13 சீசனிலும் கொல்கத்தா அணிக்காக விளையாடி உள்ளார். 2012ல் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற கேகேஆர் அணியில் இவரது பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது. ‘கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம். இந்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றிவெற்றிகளைக் குவிக்க ஆர்வமாக உள்ளேன்’ என்று மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: