பஜ்ரங் பூனியாவுக்கு கேல் ரத்னா விருது

புதுடெல்லி: மல்யுத்த நட்சத்திரம் பஜ்ரங் பூனியா கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மிக உயரிய விருதாக மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் மற்றும் கேல் ரத்னா விருது பெறுவோர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பைசுங் பூட்டியா, மேரி கோம் உட்பட 12 பேர் அடங்கிய குழுவினர் கேல் ரத்னா விருதுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா (25 வயது) பெயரை இறுதி செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். மேலும் ஒருவருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பஜ்ரங் இந்தியாவுக்காக பதக்கங்களை குவித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் ஜார்ஜியாவில் பயிற்சி மேற்கொண்டு வரும் பஜ்ரங் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: