சில்லி பாயின்ட்...

* உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தில் ஆக. 19ம் தேதி தொடங்குகிறது. உலக தொடரில் ஏற்கனவே 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ள இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து இம்முறை தங்கம் வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறார்.

* இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு முன்னாள் நட்சத்திரங்கள் பிரையன் லாரா, ராம்நரேஷ் சர்வான் இருவரும் ஆலோசனை வழங்கவுள்ளனர்.

* வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியுடன் இந்தியா லெவன் அணி மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம், ஆன்டிகுவா கூலீட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. டி20, ஒருநாள் தொடரில் இடம் பெறாத ரகானே, பூம்ரா, புஜாரா ஆகியோர் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.

* டிஎன்சிஏ இரங்கல்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணத்திற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்து தகவல் பதிந்து வருகின்றனர்.

* டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 69 சிக்சர் விளாசி படைத்த சாதனையை (200 டெஸ்ட், 329 இன்னிங்ஸ்), நியூசிலாந்தின் டிம் சவுத்தீ சமன் செய்துள்ளார் (66 டெஸ்ட், 96 இன்னிங்ஸ்).

Related Stories: