சாதி அடையாளத்தை வெளிக்காட்டும் விதமாக மாணவர்கள் கைகளில் கயிறுகள் அணிவதை தடுக்க வேண்டும்

சென்னை : சாதி அடையாளத்தை வெளிக்காட்டும் விதமாக மாணவர்கள் கைகளில் வண்ணப்பட்டை அணிவது தடுக்கப்பட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கயிறுகள் கட்டி வருவது தொடர்பான விவகாரத்தில் பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் கல்வி அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

சாதிய அடையாளத்தை வெளிக்காட்டும் விதமாக மாணவர்கள் கைகளில் வண்ணப்பட்டைகளை கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதை தடுக்க வேண்டியது அவசியமானது தான். அதே நேரத்தில் இறை நம்பிக்கையுடன் தொன்று தொட்டு கைகளில் கட்டப்படும் கயிறுகளுக்கும், நெற்றியில் திருநீறு, குங்குமம் உட்பட திலகங்கள் இடுவதற்கு தடை விதிப்பது மத நம்பிக்கைகளில் தலையிடுவதாகும். எனவே, இப்பிரச்னையில் தமிழக அரசு தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories: