பைக் மோதி முதியவர் பலி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய போலீஸ்காரர் கைது

சென்னை : அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் நேற்று காலை நடந்து சென்ற, சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த முதியவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, சிசிடிவி கேமரா காட்சி மூலம்,

விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஆய்வு செய்தபோது, அரும்பாக்கம், என்.எஸ்.கே. நகரை சேர்ந்த மகேஷ் (24), என்பவர் விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. அவர், ஆவடி 3வது படாலியனில் போலீசாக பணிபுரிவதும் தெரியவந்தது. அவரை கைது செய்தனர். இறந்த முதியவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Advertising
Advertising

* தாம்பரத்தில் இருந்து கடந்த 13ம் தேதி  அரசு பேருந்து ஒன்று காஞ்சிபுரத்துக்கு புறப்பட தயாராக இருந்தது.  கண்டக்டர், திட்டக்குடியை சேர்ந்த வெங்கடாசலம் (35), பேருந்துக்குள்  பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், திடீரென  கண்டக்டர் பணப் பையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். அதில்,  வசூல் தொகை ₹20 ஆயிரம் இருந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் தாம்பரம்  போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

* சைதாப்பேட்டை கவரை தெருவை  சேர்ந்த புருஷோத்தமன் (33) என்பவர், திருமணமாகாத விரக்தியில் நேற்று  முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* செங்குன்றம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பாடியநல்லூர், எம்.ஏ  நகரை சேர்ந்த அருண் (18), ஆனந்த் (18), விஜய் (23), மணிகண்டன் (18) ஆகியோரை  போலீசார் கைது செய்தனர்.

* அபிராமபுரம் கேவிடி கார்டன் பகுதியை  சேர்ந்த கனிமொழி (23), நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

* சென்னை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த பிளஸ் 2 மாணவன், நேற்று முன்தினம் வீட்டின்  அருகே நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த 2 பேர், போலீசார் போல் நடித்து,  மாணவன் கை, கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை அபேஸ் செய்து கொண்டு தப்பினர்.

* பாடி, டி.வி.எஸ் நகர், 6வது தெருவை சேர்ந்த சரவணன் (30), நேற்று முன்தினம்  இரவு பாடி, சி.டி.எச் சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர்,  சரவணனை வழிமறித்து, அவரது தலையில் வெட்டி விட்டு, அவரிடம் இருந்த ₹400  மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

* பட்டாபிராம்  அம்பேத்கர் நகர் மாதவி தெருவை சேர்ந்த லோகம்மாள் (55), செவ்வாப்பேட்டை உள்ள  அரசு மகளிர் விடுதியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம்  இரவு, இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 8  சவரன் நகை, ₹80 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

Related Stories: