சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் நாளை பவித்ர உற்சவம் துவக்கம்

திருமலை: சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் நாளை பவித்ர உற்சவம் தொடங்குகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழகத்தில் சென்னை தி.நகரில் உள்ள தகவல் மைய வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நாளை முதல் 20ம் தேதி வரை 3 நாட்களுக்கு பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மாலை புண்ணியாகவசனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் சேவைகள் நடக்கிறது. நாளை காலை யாகசாலையில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது.

சுவாமி, தாயார் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், யாகசாலையில் பவித்ர மாலைகள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

19ம் தேதி காலை பவித்ர மாலைகள் அனைத்தும் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. 20ம் தேதி காலை மகா பூர்ணாஹுதியுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெற உள்ளது. பின்னர் கும்ப ஆராதனை, திருமஞ்சனம்  நிகழ்ச்சியுடன் நிறைவு பெறவுள்ளது. இதையொட்டி இந்து தர்ம பிரசார பரிஷத், அன்னமாச்சாரியா திட்டத்தின் சார்பில் சங்கீத சொற்பொழிவு மற்றும் ஹரிகதை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: