பாகிஸ்தானில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய இந்துக்கள்

பெஷாவர்: சகோதர-சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன், நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் பெண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக நினைக்கும் நெருக்கமானவர்களுக்கு ராக்கி எனப்படும் வண்ண கயிறு கட்டியும், பரிசளித்தும் மகிழ்ச்சி அடைவார்கள். ராக்கி கட்டிக் கொள்ளுவது, ராக்கி கட்டிய பெண்ணை சகோதரிகளாக பாவித்து அவளது பாதுகாப்பு, நலனுக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதிமொழி ஏற்பதற்கு சமமாகும்.

பாகிஸ்தானின் கைபர் பகதுன்கவா மாகாணத்தில் உள்ள இந்துக்கள் நேற்று ரக்‌ஷா பந்தனை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். ரக்‌ஷா பந்தனையொட்டி பெஷாவர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories: