மருத்துவமனைக்கு சென்று ஜெட்லி உடல்நிலையை விசாரித்தார் ஜனாதிபதி

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை பற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார். பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பாஜ ஆட்சியின்போது நிதி அமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உடல்நலக் குறைவு காரணமாக அவர் போட்டியிடவில்லை. கடந்த 9ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அவருக்கு பல்வேறு பிரிவுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வழக்கமாக, முக்கிய பிரமுகர்களின் உடல்நிலை, சிகிச்சை குறித்து தினமும் அறிக்கை வெளியிடும் எய்ம்ஸ் நிர்வாகம், ஜெட்லியின் உடல்நிலையை பற்றி மட்டும் இதுவரை அறிக்கை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது. இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த வாரம் மருத்துவமனைக்கு சென்று ஜெட்லியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மருத்துவமனைக்கு சென்று, மருத்துவர்களிடம் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

Related Stories: