ஆந்திராவில் நடந்த சுதந்திர தின விழாவில் தரையில் விழுந்த விருதை எடுத்து கொடுத்த முதல்வர்

திருமலை: ஆந்திராவில் நடந்த 73வது சுதந்திர தின விழாவில் தரையில் விழுந்த விருதை கீழே குனிந்து எடுத்து கொடுத்த முதல்வர் ஜெகன்மோகனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நேற்று முன்தினம் 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநில முதல்வர் ஜெகன்மோகன் ‘தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Advertising
Advertising

விழாவில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். அப்போது, போலீசாருக்கு வழங்க வேண்டிய விருதுகளில் ஒன்று கீழே விழுந்தது. இதை பார்த்த ஜெகன் மோகன் உடனடியாக   கீழே குனிந்து தரையில் விழுந்த விருதை எடுத்து காவல்துறை அதிகாரிகளிடம்  வழங்கினார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்களும், அதிகாரிகளும், முதல்வராக இருந்தபோதிலும் எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் தரையில் விழுந்த விருதை கீழே குனிந்து எடுத்து தந்தது ஜெகன் மோகனின் தன்னடக்கத்தை காண்பிக்கிறது என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: