பீகாரில் சர்ச்சைக்குரிய எம்எல்ஏ வீட்டில் சிக்கிய ஏகே 47, வெடிகுண்டுகள்

பாட்னா:  பீகார் மாநிலம், மொகாமா சட்டப்பேரவை தொகுதியில் இருந்து பலமுறை ஐக்கிய ஜனதா தளம் சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆனந்த் சிங்.  முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவராக இருந்த இவர் கடந்த 2015ல் அந்த கட்சியில் இருந்து விலகினார். தற்போது சுயேச்சையாக போட்டியிட்டு எம்எல்ஏ.வாகி இருக்கிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், நடவான் கிராமத்தில் உள்ள அவரது மூதாதையர் வீட்டில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாட்னா எஸ்பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அதில்,ஏகே 47 ரக துப்பாக்கி, வெடிபொருட்கள்  சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ‘எனது வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனை திட்டமிடப்பட்ட சதிசெயல்,’ என்று ஆனந்த் கூறினார்.

Related Stories: