சுதந்திர தின உரை தொடர்பாக மோடிக்கு ப.சிதம்பரம் பாராட்டு

புதுடெல்லி: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்ட கருத்துகளுக்காக ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார். நாட்டின் 73வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றினார். அப்போது பேசிய அவர், `பெருகி வரும் மக்கள் தொகையால், எதிர்கால சந்ததியினருக்கு எண்ணற்ற பிரச்னைகள் உண்டாகும். நாட்டின் வளத்தை உருவாக்குபவர்களை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்காமல் மதிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கிற்கு பதிலாக சணல், துணியினாலான தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்,’ என்று அறிவுறுத்தினார்.

Advertising
Advertising

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம் நேற்று கூறுகையில், சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறிய 3 அறிவுரைகளை அனைவரும் வரவேற்க வேண்டும். இதில், அவர் கூறிய 2வது அறிவுரையானது மத்திய நிதியமைச்சர், அவரின்  கட்டுப்பாட்டில் உள்ள வரித்துறை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அமைப்பினருக்கு நன்றாகவும், தெளிவாகவும் புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். மேலும், பிரதமர் கூறிய முதலாவது, 3வது அறிவுரைகள் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்,’’ என்றார்.

Related Stories: