இங்கிலாந்து சிறைப்பிடித்த ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த 2 தமிழர்கள் உட்பட 24 இந்தியர்களும் விடுதலை

லண்டன்: இங்கிலாந்து சிறைப்பிடித்த ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த 2 தமிழர்கள் உட்பட 24 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறையின் தொடர் முயற்சியின் பலனாக 24 இந்தியர்களையும் விடுவிக்க இங்கிலாந்து ஒப்புக்கொண்டது. இதன்படி திருச்செங்கோட்டை சேர்ந்த கப்பல் பொறியாளர் நவீன், சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பாலாஜி உள்பட விடுதலையான 24 இந்தியர்களும் விரைவில் தாயகம் திரும்ப இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertising
Advertising

சிரியாவுக்கு பெட்ரோலிய எண்ணெயை ஈரான் கப்பல் கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டி கிரேஸ்-1 என்ற கப்பலை இங்கிலாந்து அரசு சிறைபிடித்தது.ஈரான் மீது ஆத்திரமாக இருக்கும் அமெரிக்கா, இப்பிரச்சினையில் திடீரென மூக்கை நுழைத்தது. சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரி, ஜிப்ரால்டர் நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் அமெரிக்கா வழக்கு தொடர்ந்து.

ஆனால் ஈரான் எண்ணெய் கப்பலையும் விடுவிக்க ஜிப்ரோல்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரான் எண்ணெய் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதால் அவர்களது உறவினர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 24 பேரும் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: