தொழில்நுட்ப காரணத்தால் பணம் எடுக்க முடியாவிட்டால் ஏடிஎம் கட்டணம் வசூல் கூடாது: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

மும்பை: ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, தொழில்நுட்பக் காரணத்தால் பணம் எடுக்க முடியாமல் போனாலோ அல்லது வேறு ஏதாவது முக்கிய காரணத்தால் எடுக்க முடியவில்லை என்றாலோ, அந்த பரிவர்த்தனை, கணக்கில் சேர்க்கப்படாது. அதாவது மாதத்திற்கு 5 முறை ஏடிஎம்மில் கட்டணம் இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் கட்டணம் விதிக்கப்படும். தற்போது, மேற்குறிப்பிட்ட காரணத்தால் வாடிக்கையாளரால் பணம் எடுக்க முடியவில்லை என்றால் அந்த பரிவர்த்தனையை கட்டணமில்லாத சேவையில் சேர்க்கப்படாது என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

Advertising
Advertising

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: “தொழில்நுட்பக் காரணத்தால், ஏடிஎம்மில் பணம் இல்லாததால் போன்ற காரணங்களால் வாடிக்கையாளரால் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியவில்லை என்றாலும், அந்த பரிவர்த்தனையை கட்டணம் இல்லாத பரிவர்த்தனை கணக்கில் வங்கிகள் சேர்த்து கட்டணம் விதிப்பதாக வாடிக்கையாளர்கள் புகார்கள் செய்துள்ளது” தங்களது கவனத்திற்கு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எனவே இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

“ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளர் பணம் எடுக்கும்போது, வன்பொருள், மென்பொருள், தகவல் தொடர்பு பாதிப்பு போன்ற தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் பணம் இல்லை, மேலும் வங்கிகள் சேவை வசதி அளிப்போர் குறைபாடு மற்றும் தவறான பின் (ரகசிய எண்கள்) உள்பட தகுந்த காரணங்களால் அந்த பரிவர்த்தனையில் பணம் எடுக்க முடியவில்லை என்றால், அந்த பரிவர்த்தனை, கட்டணம் இல்லாத 5 சேவைகளில் சேர்க்கக் கூடாது. மேலும் இதுபோன்ற குறைபாடான பரிவர்த்தனைக்கு கட்டணம் எதுவும் விதிக்கக் கூடாது” என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

“பணம் எடுக்காமல் மற்ற சேவை பரிவர்த்தனை (பணம் இருப்பு விவரத்தை பார்த்தல், காசோலை புத்தகம் கோருதல், வரி செலுத்துதல், பணம் அனுப்புதல்) ஆகியவையும் பரிவர்த்தனை என்றாலும், இவற்றை மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் எடுத்துக் கொள்ளும் பரிவர்த்தனை கணக்கில் சேர்க்கக் கூடாதுஎன்று ரிசர்வ் வங்கி தெளிவு படுத்தி உள்ளது.

Related Stories: