ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் 14 பேர் காயம்

டோக்கியோ:  ஜப்பானின் மேற்கு பகுதியில், ‘க்ரோசா’ என்ற புயல் உருவானது. இது, தெற்கு ஜப்பானை நேற்று தாக்கியது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. புயலின் தாக்கத்தால் மணிக்கு 144 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் வேறுடன் சாய்ந்தன. அதே நேரத்தில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. 10 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். பலத்த மழை காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகளை தாண்டிய வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். 720 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதேபோல், புல்லட் ரயில் சேவையும் குறைக்கப்பட்டது. புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மற்றும் மழை சம்பவங்களில் இதுவரை 14 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Related Stories: