அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 போலீசார் காயம்

வாஷிங்டன்:  அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் போலீசார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் நைஸ்டவுன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைக்காக போலீசார் சென்றனர். அப்போது, திடீரென அந்த வீட்டில் இருந்தவர்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். இதனால், அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது.  நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த துப்பாக்கிச்சூடு 8 மணி நேரம் நீடித்தது. பின்னர், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தில் 6 போலீசார் காயமடைந்தனர். கைது செய்யப்பட்ட மவுரிஸ் ஹில்லிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: