ஓவர் த்ரோ...

போதும் பேபி ஓடு

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் சுமாராக ஆடி வருகிறார். அதிலும் நேற்று முன்தினம் டக் அவுட்டானதில் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். சமூக ஊடகங்களில் ரசிகர்கள் ‘போதும்  பேபி (குழந்தை) ஓடு’, ‘விக்கெட் மதிப்பை அந்த பேபிக்கு சொல்லிக் கொடுங்கள்’,  ‘சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்ற திறமையான விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்’ என விதவிதமான அர்ச்சனை செய்கின்றனர். அதே நேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

10 ஆண்டுகளில் 20,000

ஒரே அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த  சச்சனின் சாதனையை விராட் கோஹ்லி சமன் செய்தார். சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 70 போட்டிகளில் விளையாடி 9 சதங்களும், கோஹ்லி,  வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 35 போட்டிகளில் விளையாடி 9 சதங்களும் அடித்துள்ளனர். இது தவிர 10 ஆண்டுகளில்  டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 விதமான போட்டிகளில் மொத்தமாக 20 ஆயிரம் ரன்னை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் நேற்று முன்தினம் கோஹ்லி படைத்தார். அடுத்த இடத்தில்  ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 10 ஆண்டுகளில் 18,962 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்கிறது ஆஷஸ் தொடர்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட்  நடக்கிறது. மழை காரணமாக நேற்று முன்தினம் முதல்நாள் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று மழையில்லாததால் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீ்சியது. இங்கிலாந்து 33 ஓவருக்கு 3 விக்கெட்  இழப்புக்கு 92 ரன் எடுத்திருந்தது.

Related Stories: