டிஎன்பிஎல் பைனல் டிராகன்ஸ் கோப்பை வெல்ல கில்லீஸ் 127 ரன் இலக்கு

சென்னை: டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன் வெற்றிப் பெற 127 ரன் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். டிஎன்பிஎல் தொடரின் 4வது சீசன் இறுதிப் போட்டி சென்னையில் நடந்தது.  இறுதிப்போட்டியில் 3வது முறையாக சேப்பாக் சூப்பர் கில்லீசும், தொடர்ந்து 2வது முறையாக திண்டுக்கல் டிராகன்சும் களம் கண்டன. டாஸ் வென்ற கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கங்கா தர் ராஜு 4 ரன்னில் ரோகித் பந்து வீச்சிலும், கோபிநாத் ரன் ஏதும் எடுக்காமல்  கவுசிக் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நட்சத்திர ஆட்டக்காரர் விஜய்சங்கரை ஒரு ரன்னில் வெளியேற்றினார் கவுசிக். அப்போது அணி 4.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 19 ரன்.

அதனால் கேப்டன் கவுசிக் காந்தியும், விக்கெட் கீப்பர சுஷிலும் நிதானமாக விளையாட தொடங்கினர். ஆனால் 9வது ஓவரில்கவுசிக் காந்தி(22 ரன்)யை அபினவ் ஆட்டமிழக்க செய்தார். கில்லீஸ் அணி 10வது ஓவரில் 52 ரன் எடுத்தது.

மற்றவர்கள் சொதப்பினாலும் சசிதேவ் 33 பந்துகளில் 44ரன், முருகன் அஸ்வின் ஆட்டமிழக்காமல் 28 ரன் எடுக்க அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவியது. ஆட்ட நேர முடிவில் சூப்பர் கில்லிஸ் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது. கவுசிக், அபினவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரோகித் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் விளையாட தொடங்கியது.

Related Stories: