புரோ கபடி சீசன் 7 சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை: புரே கபடி 7வது சீசனின் சென்னை கள போட்டிகள் நாளை நேரு உள் விளையாட்டரங்கில்  தொடங்குகிறது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள்  மோத உள்ளன. புரோ கபடியின் 7வது சீசன் ஜூலை 20ம் தேதி ஐதராபாத்தில்  தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் களம் காண்கின்றன.   லீக் சுற்றில் மொத்தம்  132 போட்டிகள்  மும்பை, பாட்னா, அகமதாபாத், டெல்லி என மொத்தம் 12   களங்களில் நடக்கிறது.  சென்னை களத்திற்கான போட்டி  நாளை முதல் ஆக. 23ம்  தேதி வரை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும்.சென்னை அணியான தமிழ்  தலைவாஸ் முதல் போட்டியில்  பெங்களூர் புல்ஸ் அணியை எதிர்த்து நாளை  விளையாடுகிறது. ஏற்கனவே  6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வி, ஒரு  சமனுடன் 20 புள்ளிகளை பெற்றுள்ளது.  தெலுங்கு,  அரியானா, குஜராத் அணிகளை  வீழ்த்தியும்,  யுபி அணியுடன் சமனும் செய்தது. மேலும்  டெல்லி, பாட்னா  அணிகளிடம் தலா ஒரு புள்ளி வித்தியாசத்தில்தான் தோற்றது.

உள்ளூரில்  நடைபெறும்  4 போட்டிகளில் வெற்றி பெறவதின் பெறுவதின் மூலம்  புள்ளி கணக்கை அதிகரிப்பதுடன, வெளியூர் களங்களில் பதட்டமின்றி ஆடமுடியும்  என்று தமிழ் தலைவாஸ் திட்டமிட்டுள்ளது.  இதுவரை நடைபெற்ற  ஐதராபாத், மும்பை, பாட்னா,  அகமதாபாத் களங்களில் உள்ளூர் அணிகளான  தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, பாட்னா பைரேட்ஸ், குஜராத் பார்ச்சூன்  ஆகியவை பெரிதாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த நிலைமையை  தமிழ்தலைவாஸ் மாற்றுமா என்பது நாளை முதல் தெரியும்.

சென்னையில் தமிழ் தலைவாஸ்

புரோ கபடி 7 சீசன்களாக நடைபெற்றாலும்,  2017ம் ஆண்டுதான் தமிழ் தலைவாஸ் அணி  புதிதாக அறிமுகமானது.  கடந்த 2 சீசன்களில் தமிழ் தலைவாஸ் பெரிதாக  சாதிக்கவில்லை. அந்த அணி இடம் பெற்றிருந்த பிரிவுகளில் கடைசி இடம்தான் மிஞ்சியது. சென்னையில் நடந்த போட்டிகளிலும் அதே நிலைமைதான்.

2017-5வது சீசன்

செப்டம்பரில் நடைபெற்ற  சென்னை களத்தில் தமிழ் தலைவாஸ் 6 போட்டிகளில் விளையாடியது. அதில் குஜராத், புனே, ஜெய்பூர், மும்பை, தெலுங்கு, பெங்களூர் என 6 அணிகளிடம் மோதியது. அனைத்து போட்டிகளிலும் தோல்விதான் கிடைத்தது. ஆனால் 3 போட்டிகளில் குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்றதால் தலா ஒரு புளளி கிடைத்தது.

2018-6வது சீசன்

அக்டோபர் மாதம் நடைபெற்ற சென்னை களத்தில் தமிழ் தலைவாஸ் 5 போட்டிகளில் விளையாடியது. முதல் போட்டியில் பாட்னாவை 16 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன் பிறகு நடைபெற்ற 4 போட்டிகளில் யுபி, தெலுங்கு, பெங்களூர், பெங்கால்  அணிகளிடம் தோற்றது. அதில் 2 போட்டிகளில்  குறைந்த புள்ளிகளில் தோற்றதால் தலா ஒரு புள்ளியை ஈட்டியது.

2019-7வது சீசன்

நாளை தொடங்கும் இந்த சீசனில் 4 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் விளையாட உள்ளது. அதன்படி ஆக.17ம் தேதி பெங்களூர், ஆக.18ம் தேதி புனேரி பல்தன், ஆக.21ம் தேதி ஜெய்பூர், ஆக.23ம் தேதி மும்பை ஆகிய அணிகளுடன் மோத உள்ளது.

Related Stories: