×

மீண்டும் உயரப்பறந்தது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.28,944 -க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.28,944- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.3,618- க்கு விற்பனையாகிறது. அதே வேளையில் சென்னையில் வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.48.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இமாலய உச்சத்தில் இருந்த தங்கம் விலை நேற்று சரிவு

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து  அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி ஒரு சவரன் 26,480, 2ம் தேதி 27,064, 3ம் தேதி 27,328, 5ம் தேதி 27,680, 6ம் தேதி 27,784, 7ம் தேதி 28,376, 8ம் தேதி 28,464, 9ம் தேதி 28,552, 10ம் தேதி 28,656க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை  தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. நேற்று முன்தினம்(12ம் தேதி) ஒரு கிராம் தங்கம் 3,603க்கும், சவரன் 28,824க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம்  விலை அதிகப்படியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு 24 அதிகரித்து ஒரு கிராம் 3,627க்கும், சவரன் ₹192 அதிகரித்து ஒரு சவரன் 29,016க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 13 நாட்களில் சவரனுக்கு 2536 அளவுக்கு தங்கம்  விலை உயர்ந்தது.இம்மாதம் இறுதிக்குள் தங்கம் சவரன் 30,000 தாண்டும் என்றும் தங்க வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென்று குறைந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை  49 குறைந்து 3578க்கு விற்பனையானது.  மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 392 குறைந்து  28,624க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.


Tags : Jewelry Gold, Price, Shaving, Silver, Sale
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு