13 நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் சவரனுக்கு 392 குறைவு: வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு

சென்னை: கடந்த 13 நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு 392 குறைந்தது. அதன்படி நேற்று சவரன் தங்கம் 28, 624 க்கு விற்பனையானது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து  அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி ஒரு சவரன் 26,480, 2ம் தேதி 27,064, 3ம் தேதி 27,328, 5ம் தேதி 27,680, 6ம் தேதி 27,784, 7ம் தேதி 28,376, 8ம் தேதி 28,464, 9ம் தேதி 28,552, 10ம் தேதி 28,656க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை  தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. நேற்று முன்தினம்(12ம் தேதி) ஒரு கிராம் தங்கம் 3,603க்கும், சவரன் 28,824க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம்  விலை அதிகப்படியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு 24 அதிகரித்து ஒரு கிராம் 3,627க்கும், சவரன் ₹192 அதிகரித்து ஒரு சவரன் 29,016க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 13 நாட்களில் சவரனுக்கு 2536 அளவுக்கு தங்கம்  விலை உயர்ந்தது.

இம்மாதம் இறுதிக்குள் தங்கம் சவரன் 30,000 தாண்டும் என்றும் தங்க வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென்று குறைந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை  49 குறைந்து 3578க்கு விற்பனையானது.  மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 392 குறைந்து  28,624க்கும் விற்பனையானது.  இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: இறக்குமதி பொருட்களுக்கான விலையை  அமெரிக்கா மற்றும் சீனா கடுமையாக உயர்த்தி உள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.  இந்த வர்த்தக போரின் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில்   இறக்குமதி பொருட்களுக்கான  வரியை சீனா குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் விலை குறைந்துள்ளது. எவ்வளவு வரி குறைக்கப்பட்டுள்ளது என்பது முழுமையாக தெரிந்த பிறகுதான் விலை குறைவு தொடர்பாக முழுமையான தகவல்  ெதரியவரும். இனிமேல் தங்கம் விைல குறையும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: