பொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும் வளர்ந்த நாடுகள்: உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது...டிரம்ப் பேட்டி

பென்சில்வேனியா: இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உலக  வங்கியானது உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளது. அதாவது 2017-ம் ஆண்டு பட்டியலில் 5-ம் இடத்தில் இருந்த இந்தியா 2018 பட்டியலின் படி 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2018 பட்டியலின் படி பொருளாதாரத்தின் மொத்த மதிப்பாக 20.5 ட்ரில்லியன் டாலர்களை கொண்ட அமெரிக்கா  முதலிடத்தில் உள்ளது. 13.6 ட்ரில்லியன் டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 5 ட்ரில்லியன் டாலர்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளது. 2.7 ட்ரில்லியன் டாலர்களுடன் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

ஆனால், பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கணிப்பின்படி, 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும் என்றும் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய  பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியா, சீனா  ஆகியவை இனியும் வளரும் நாடுகள் அல்ல. அதனை கூறிக்கொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது.

ஆனால், இரண்டு நாடுகளும், வளரும் நாடுகள் எனக்கூறிக்கொண்டு, சலுகைகளை அனுபவித்து வருகின்றன. இதனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றன. உலக வர்த்தக மையம், அமெரிக்காவை சமமாக நடத்த வேண்டும்.  இந்தியா, சீனாவை வளர்ந்த நாடுகளாக பார்க்க வேண்டும். இந்த இரண்டு நாடுகளும் உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது. அவர் கூறினார்.


Tags : India and China in developed economies: Do not enjoy WTO concessions ...
× RELATED 2027-ம் ஆண்டு மக்கள் தொகை எண்ணிக்கையில்...