உலகப்போரினால் ஒலிம்பிக் போட்டி தடைபட்டது

தகவல் பலகை

Advertising
Advertising

ஒவ்ெவாரு விளையாட்டு வீரர்களின் உயர்ந்தபட்ச கனவு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான். அந்தளவிற்கு ஒலிம்பிக் போட்டி உலகளாவிய ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடையிலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் குளிர்காலத்திலும் என மாறிமாறி நடத்தப்படும். மாநில, தேசிய, ஆசிய என்ற நிலைகளை கடந்து உலகளாவிய போட்டி இது. சுமார் 200 நாடுகள் வரை இதில் பங்கேற்கும். இதில் பெறும் வெற்றி விளையாட்டுத்துறையின் உச்சபட்சநிலை என்பதால் போட்டி மிகக் கடுமையாகவே இருக்கும்.காலமாற்றத்தில் ஒலிம்பிக் போட்டி பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. குளிர்கால ஒலிம்பிக், ஊனமுற்றோர்க்கான மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக், இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் என்று தற்போது பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் குளிர்கால, கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. பின்பு இருபிரிவாக மாற்றப்பட்டன. உலகப்போர் ஏற்பட்டதால் 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை. கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வகையான விளையாட்டுக்களில் ஏறத்தாழ 400 போட்டிகள் நடைபெறும். இதில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். 2016ல் பிரேசிலில் உள்ள ரியோ டி ெஜனிரோவில் நடைபெற்றது. வரும் 2020ல் ஜப்பான் டோக்கியோ நகரில் இப்போட்டி நடைபெற உள்ளது.

Related Stories: