ராகுல் டிராவிட் விவகாரத்தில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார் எதுவும் இல்லை: இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். டிராவிட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பதவி வகித்ததால் இந்த நியமனத்தில் இரட்டை ஆதாயம் முரண்பாடு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் விளக்கம் கேட்டு டிராவிட்டுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தார். டிராவிட் நன்னடத்தை அதிகாரிக்கு பதில் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. பின்னர் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ரவி தோஜ்டே அளித்த பேட்டியில், ராகுல் டிராவிட் விவகாரத்தில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார் எதுவும் இல்லை. இனி, டி,கே.ஜெயின்தான் முடிவெடுக்க வேண்டும். எங்களைக் கேட்டால் நாங்கள் டிராவிட்டுக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டோம் என்று தெரிவிப்போம். டிகே.ஜெயின் இரட்டைப்பதவி நலன் இருக்கிறது என்றால், நாங்கள் எங்கள் பதிலை அவர்களுக்கு அளிப்போம்’’ என தெரிவித்தார்.

இதுகுறித்து பிசிசிஐ தரப்பு அதிகாரி கூறுகையில், ‘தேசிய கிரிக்கெட் அகாடமி பணியில் டிராவிட் பணி அமர்த்தப்பட்ட போது இந்தியா சிமெண்ட்ஸ் பணியை விட வேண்டும் அல்லது விடுப்பில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து சம்பளம் இல்லாத விடுப்புக்கு டிராவிட் இந்தியா சிமென்ட் நிறுவனத்திடம் கோரியுள்ளார். எனவே, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரம் இப்போது இல்லை’ என்றார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி புதிய பயிற்சியாளரை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தேர்வு செய்யும். கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தன்னிச்சையான அமைப்பு. அவர்கள் வழக்கமான விதிமுறையின்படி பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள்’ என்றார்.

Tags : Rahul Dravid, Double Post, Complaint, Indian Cricket Board
× RELATED ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்களை...