நீலகிரி, தேனியில் அடுத்த 2 நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

நீலகிரி: நீலகிரி, கோவை,தேனியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், சென்னையில் வழக்கத்தை விட 12 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது எனவும் வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழையும், வால்பாறையில் 7 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: