குண்டு வீசி மீன்பிடித்ததாக கணவர் மீது பொய் வழக்கு... குழந்தைகளுடன் மனைவி எஸ்பியிடம் புகார்

ராமநாதபுரம்: தொண்டி பகுதியில் படகுகளில் செல்லும் மீனவர்கள் வெடிகுண்டு வீசி மீன்பிடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து வெடிகுண்டு வீசி மீன்பிடிப்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொண்டி கடற்கரை பகுதியில் சில மீனவர்கள் செய்யும் இச்செயல்களால் பெரும்பாலான மீனவர்களை போலீசார் பொய் வழக்கில் கைது செய்வதாக அப்பகுதி மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்பியிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொண்டி புதுக்குடி வடக்கு காலனி பகுதியை சேர்ந்தவர்கள், வெடிகுண்டு வீசி மீன்பிடித்ததாக படகின் உரிமையாளர் செந்தில்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் சிலரை கைது செய்தனர். இந்நிலையில் செந்தில்குமாரை தேடி வீட்டுக்கு சென்ற போலீசார், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், கணவரை ஒப்படைக்காவிட்டால் மனைவி காளீஸ்வரி மீது வழக்கு போடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி செந்தில்குமார் மனைவி காளீஸ்வரி நேற்று குழந்தைகளுடன் வந்து ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், ‘‘தொண்டி பகுதியில் புதுக்குடியிருப்பு வடக்கு காலனியில் வசிக்கும் நாங்கள் 4 படகுகள் வைத்திருந்தோம். ஆனால், மீன்பிடி தொழில் நசிந்து விட்டதால் தற்போது ஒரு படகை மட்டும் வாடகைக்கு விட்டு அதில் வரும் வருவாயில் வாழ்ந்து வருகிறோம். எனது கணவர் செந்தில்குமார் படகில் மீன்பிடிக்கச் செல்வதில்லை. ஆனால் தொண்டி போலீசார் எனது கணவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். கணவர் தலைமறைவான நிலையில், அவரை ஒப்படைக்கக் கோரி என்னையும், குழந்தைகளையும் மிரட்டுகின்றனர். சம்பந்தப்பட் அந்த போலீசாரை எஸ்பி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: