அத்திவரதரை தரிசிக்க வந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்த விஜயா என்ற கர்ப்பிணிக்கு கோவில் வளாகத்திலேயே ஆண்குழந்தை பிறந்துள்ளது. இன்று அத்திவரதரை தரிசிக்க பல லட்சம் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தானாவரம் பகுதியை சேர்ந்த விஜயா (23) வயது கர்ப்பிணி பெண் அத்திவரதரை தரிசனம் மேற்கொள்வதற்காக வந்திருந்தார். அவர் கூட்டத்தில் செல்லாமல் அங்கே கர்ப்பிணி பெண்களுக்கு அமைக்கப்பட்ட வழியில் சென்று அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் மேற்கு பகுதி வழியே வெளியே வரும் பொழுது விஜயாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கே இருந்த காவலர்களும் , பொதுமக்களும் அந்தப்பகுதியில் இருந்து மீட்டு கோவில் வளாகத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் அவரை அனுமதித்துள்ளனர். அப்போது பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் கெளதம் மற்றும் செவிலியர் யோகவள்ளி ஆகியோரின் துரித முயற்சியால் அந்த மருத்துவ முகாமிலேயே விஜயாவுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள்.

பின்னர் இருவரையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோவில் வளாகத்திற்குள் வரக்கூடிய பக்தர்கள் பெரும்பாலானோர் 6 கி.மீ. தொலைவில் இருந்தே வருகிறார்கள். இச்சமயத்தில் கூட்டத்தில் கைகுழந்தைகளுடன் வருகிற தாய்மார்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் அந்த வரிசையில் வர தேவை கிடையாது. அதாவது நேரடியாக கிழக்குபகுதி வாயில் வழியாக வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு கிழக்குப்பகுதி வாயில் வழியாக வரக்கூடிய பக்தர்களுக்காக பிரத்யேக வழி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சர்க்கர நாற்காலிகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்கு நேரடியாக அத்திவரதரை தரிசித்து எந்தவித இடர்பாடுகளை இன்றி வெளியே வருவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: