சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3576-க்கும், சவரன் ரூ.28,608-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.60 குறைந்து ரூ.47.40-க்கும் விற்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 34 டாலர் குறைந்து 1498 டாலராக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது.