காஷ்மீரில் அக்டோபரில் 12 -ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு..!

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் அக்டோபரில் 12 ஆம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த வாரம் மத்திய அரசு ரத்து செய்ததோடு, இம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில்,  அசம்பாவிதங்களை தடுப்பதற்காக  இம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு, இன்டர்நெட் சேவை துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்து தடையாக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில் காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, முதலீடுகளை பெற வரும் வரும் அக்டோபரில்  உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இது அக். 12-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. ஸ்ரீநகரில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தொழிலதிபர்கள், தொழிற்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட 2,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த மத்திய அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான முழு ஆதரவையும் அளிப்பதாக மத்திய உள்துறை உள்பட பல்வேறு மத்திய அமைச்சகங்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாடு, ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு உள்ள சந்தேகங்கள், அச்சத்தை போக்குவதற்கும் உதவும் என ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலர் நவீன் சவுத்ரி  சவுத்ரி தெரிவித்தார்.

Related Stories: