சுதந்திர தின இசை வீடியோ வெளியீடு: மத்திய அமைச்சர் வெளியிட்டார்

புதுடெல்லி: நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி `வதான்’ (தாய் நாடு) இசை வீடியோவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று  வெளியிட்டார். இதை தூர்தர்ஷன் தயாரித்துள்ளது. ஜாவித் அலி பாடியுள்ளார். இந்த வீடியோ பாடலில் கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் அழகு, ராஜஸ்தானின் பாலைவனம், வடகிழக்கு மாநிலங்களின் வனப்பு உள்பட நாடு முழுவதிலும் உள்ள மனம்  கவர்ந்த இடங்களின் அழகிய புகைப்படங்களும், இந்திய போர் விமானங்களின் சாகசங்கள், இந்தியாவின் அதிவேக ரயிலான `வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ சேவையை மோடி கொடி அசைத்து தொடங்குதல், சர்வதேச யோகா தின நிகழ்வுகள் உட்பட  பல்வேறு புகைப் படங்களின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக ஜவடேகர் கூறுகையில், ``புதிய இந்தியா திட்டம், சந்திரயான்-2 ஏவுகணை சோதனை ஆகியவற்றின் வெற்றிக்காக இது அர்ப்பணிக்கப்படுகிறது. தேசப்பற்றை ஊக்குவிக்கும் இந்த பாடல் ஆகாசவானி, தூர்தர்ஷன் ஆகியவற்றில்  ஒலிபரப்பப்படும். சுதந்திர தினத்தை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து எப்எம்.கள், செய்தி மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள், சமூக வலைதளங்களிலும் இந்த பாடல் ஒலிபரப்பாக வேண்டும் என்ற நோக்கில் தூர்தர்ஷன்  இதற்கு இலவச பதிப்புரிமை வழங்கி உள்ளது,’’ என்றார்.

Related Stories: