நிதின் கட்கரி சென்ற விமானத்தில் கோளாறு

நாக்பூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருந்து டெல்லி செல்வதற்காக இன்டிகோ விமானம் தயாராக இருந்தது. பாபா சாகிப் அம்பேத்கர் விமான நிலையத்தில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும் இந்த விமானம், காலை 9.35 மணிக்கு டெல்லி  விமான நிலையத்தை வந்தடையும்.

Advertising
Advertising

இதில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உட்பட 159 பயணிகள் இருந்தனர். காலை 7.50க்கு விமானம் புறப்பட தயாரானது. விமானம் புறப்படுவதற்காக ஓடுதளத்திற்கு வந்தது.  அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனை தொடர்ந்து விமான புறப்பாடு நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் இறக்கி விடப்பட்டனர். சில மணி நேரங்கள் கழித்து விமானம் மீண்டும்  புறப்பட முயன்றும் முடியவில்லை. ஓடுதளத்திற்கு சென்று புறப்படாமல் திரும்பிய விமானத்தில் அமைச்சர் நிதின் கட்கரி இருந்ததை அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது.

Related Stories: