சொல்லிட்டாங்க...

முதலமைச்சர் அமெரிக்காவிற்கும், லண்டனிற்கும் செல்வதாக செய்தி வந்திருக்கிறது. அவர் சீன் காட்டத்தான் செல்கிறாரா என்று சொல்வதற்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இஸ்லாமிய மக்கள் முத்தலாக் சட்டத்தை எதிர்க்கவில்லை. அரசியல் கட்சியினர்தான் எதிர்க்கிறார்கள்.
- தமிழக பாஜ தலைவர் தமிழிசை

எடப்பாடி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

விடுதலைப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்காமல், ஒதுங்கி நின்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் இப்போது தேசத்தை ஆள வந்தது காலத்தின் கோலம்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...