இடுக்கி அருகே சுத்தியலால் அடித்து மருமகன் கொலை: தம்பதி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே மருமகனை சுத்தியலால் அடித்து கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.ேகரளாவில் ராஜாக்காடு அருகே மம்மட்டிக்கானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (69). இவரது மனைவி ஜெகதாம்பா (63). இவரது மருமகன் ஷிபு (49). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஷிபுவை,  ஷீஜா விவாகரத்து செய்து விட்டதால் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இருப்பினும் இரு குடும்பத்தினர் இடையே கடும் பகை இருந்து வருவதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் இருதரப்பும் தாக்கிக்  கொண்டனர்.  இதுதொடர்பாக போலீசார் சிவன், ஷிபு உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஷிபு உள்பட 4 பேரை சிறையில் அடைத்தனர். சிவனுக்கு அன்றே ஜாமீன் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில், ஷிபு சிறையில் இருந்து விடுதலையானார். இதையடுத்து அவர் மீண்டும் சிவனை பழிவாங்க அவரது வீட்டுக்கு நேற்று சென்று அரிவாளால் சிவனை வெட்ட முயன்றார். அப்போது வீட்டில் இருந்த ஜெகதாம்மா மிளகாய் பொடி  கலக்கிய தண்ணீரை ஷிபுவின் முகத்தில் ஊற்றினார். இதில் ஷிபு தடுமாறி கீழே விழுந்தார். அப்போது சிவன் சுத்தியலால் ஷிபுவின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ஷிபு இறந்தார்.இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடம் விரைந்த ராஜாக்காடு போலீசார், ஷிபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவன் மற்றும் ஜெகதாம்பாவை கைது செய்தனர்.

Related Stories: